Friday, February 1, 2013

Vairamuthuvin Padaippu


ஓராயிரம் முத்தம் தந்து விடு....
அழகாக இருக்கிறாய்
அன்பாலே,
அரவணைக்கிறாய்...
அந்தி வேளையிலே கொஞ்சம்
... அனல் பறக்குது நெஞ்சம்
அருகில் நீ இல்லை

ஆசைகளை சுமந்து
ஆத்தி மரம் பூ போலே...
ஆவணி மாதம் முதலாய்
ஆவலோடு காத்திருக்கிறேன்
ஆனந்தத்தோடு பூத்து நிற்கிறேன்
ஆகையால்,

இயன்றவரை வந்துவிடு
இனிமை கொஞ்சம் தந்து விடு
இனிதாய் கழிய வேண்டிய பொழுதுகள்
இயலாமையால்,
இம்மியளவும் நகராமல், காலம்
இம்சிக்கிறது..

ஈகை மனம் கொண்டவன் மேல்
ஈடுபாடு கொண்டு
ஈசல் போலே கிளம்பி விட்ட ஆசைகள்,
ஈட்டியாய் பாய்ந்து காயப்படுத்துகிறது...
ஈருடல் ஓர் உயிர் ஆக வாழ
ஈருலகம் வென்றிடுவேன்,
ஈயாக கூட மாறிடுவேன் ...

உறக்கம் என்னை விலக்க
உரசி போகும்
உன்னதமான உன் நினைவுகளால்
உன்னில் நான் கலந்துவிட்டேன்
உனக்குள் என்றோ
உதித்து விட்டேன், உன்
உயிரோடு நெருங்கிவிட்டேன்...

ஊர் பேச்சு கேலி பேச்சு
ஊர் ஊரூராய் பரவி போனதால்
ஊசி போன்ற வார்த்தைகளால்
ஊனமான என் உள்ளம்
ஊஞ்சலாய் ஊசலாடி கொண்டு
ஊர்வலத்தில் ஏறி செல்லும் முன்
ஊர்வாயை மூடி விடு

எட்டாத உயரத்தில் நீ இருந்தாலும்
எண்ணிய எண்ணம் ஈடேறும் வரை
எத்துனை துன்பம் வந்தாலும்
எதிர்த்து நின்று போராடி அதில்
என்றும் வெற்றி கண்டு
எளிமையோடு உன்னுடன்
எல்லை இல்லா வாழ்க்கை நடத்த
எடுத்து வைப்பேன் முதல் அடி

ஏராளமானோர் ஏசியதால்
ஏதேனும் ஓர் முடிவெடுத்து என்னை
ஏமாற்றி விடாதே
ஏங்கி அழ வைக்காதே
ஏளனமாக பேசியவர் முன்
ஏற்றதோடு வாழ
ஏதாவது செய்வோம், புது
ஏகாந்தம் படைப்போம்

ஐம்புலன்களும்
ஐக்கியமாகும்
ஐந்து நிமிடம் அது உன்னிடம்
ஐம்பூதங்களும் விரும்பும் நாம்,

ஒன்றாய் வாழ
ஒழுங்காய் வாழ
ஒற்றுமையாய் வாழ
ஒப்புதல் நீ அளித்து விடு
ஒரு வார்த்தை பேசி விடு
ஒரு சத்தியம் செய்து கொடு

ஓலை குடிலுக்குள்
ஓர் உயிரின் ஆசை அலை
ஓங்காரமாய் ஒலித்து கொண்டிருக்க
ஓசை இல்லாமல்
ஓடி வந்து விடு,
ஓராயிரம் முத்தம் தந்து விடு...

No comments:

Post a Comment