Monday, December 31, 2012

மீண்டும் ஓர் புத்தாண்டு!

புதுப்பானையில் பொங்கும் புத்தரிசி பொங்கல் போல
ஜனநாயக ஜனவரியே ஜெயமுடன் வருக

மங்கலநாண் ஏறிய புதுப்பெண்ணின் நாணம் போல
காதல் பிப்ரவரியே கல்யாணமாய் வருக

அப்போது அலர்ந்த அல்லியின் அழகு போல
பெண்ணுரிமை மார்ச்சே பெருமையாய் வருக

வசந்தகால மண்வாச முதல்மழை போல
ஏமாறாத ஏப்ரலே ஏற்றமுடன் வருக

மண்ணில் விளைந்த துளிர் பசுங்குருத்து போல
உழைப்பு மேயே உயர்வாய் வருக

புத்தம்புது புத்தகத்தின் வாசம் போல
பள்ளி ஜூனே பயில வருக

புதுமனை புகுவிழாவின் புகைப் போல
ஜூலியட் சீசர் ஜூலையே வருக

புதிதாய்க் குலை ஈன்ற வாழை வனப்பு போல
அகஸ்டஸ் சீசர் ஆகஸ்ட்டே ஆடி வருக

மொடமொடப்புக் குறையாப் புது பருத்தி சீலை போல
கணேச செப்டம்பரே கருணையாய் வருக

புது தீப சுடர் ஒளியில் மிளிரும் புது வாழ்வு போல
தீப ஒளி அக்டோபரே புதுப்படமாய் வருக

புதிதாய்ப் பிறந்த மழலையின் முதல் சுவாசம் போல
மழலை நவம்பரே முத்தாய் வருக

இறுதியில் புதுத் திருப்பம் தரும் திரைப்படம் போல
என்றும் புதிய டிசம்பரே வருக

மீண்டும் ஓர் புத்தாண்டு தருக!
எல்லா வளமும் நலமும் தருக!!

No comments:

Post a Comment